Baby Names by Birth Star

தமிழ்க் கடவுள் முருகன் பெயர்கள், Baby Names by Birth Star,Chennai Blog

தமிழ்க் கடவுள் முருகன் பெயர்கள்

தமிழ்க் கடவுள் முருகன் பெயர்கள்

முருகனின் அழகிய பெயர்கள்

முருகன் பெயர்கள் பலதை பல்வேறு நாட்டை சார்ந்த பலரும் வைத்துள்ளனர். உதாரணத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற பல நாடுகளில் முருகன் பெயர்கள் பிரபலம். தமிழ் கடவுள் முருகன் சிவ மைந்தன் என்பதால் சிவ பக்தர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு முருகன் பெயர்கள் சூட்டி மகிழ்வதுண்டு.

முருகன் பெயர் விளக்கம்

முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருளாகும். ஆகவே முருகன் என்றால் அழகு உடையவன் , அழகன் என்பதேயாகும். எனவே முருகன் தமிழ் கடவுளாகவும் முழு முதல் கடவுளாகவும் இருக்கிறார்.

முருகன் = முருகு உடையவன்

மு ரு கு = ம்+உ ர்+உ க்+உ

முருகு என்ற எழுத்தானது தமிழின் மூன்று வகை எழுத்துகளான மெல்லினம் இடையினம் மற்றும் வல்லினம் எழுத்துகளோடு உ என்ற உயிரெழுத்து சேர்ந்து முருகு என்ற எழுத்தாகியது. இந்த அழகுக்கு உடையவனே முருகனே.

முருகன் பெயர்கள் காரணம் , சிறப்புகள்

கந்தன் – தாமரை மலரின் கந்தகத்தில் முருகன் குழந்தையாக தோன்றியதால் கந்தகமூலவன் அல்லது கந்தனாக பெயர் பெற்றார்.

காங்கேயன் – கங்கையின் மைந்தன்

கார்த்திகேயன் – கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவன்.

குகன் – மனம் விரும்பியவர்களின் இதயங்களின் குகையில் இருப்பவன்

குமரன் – குமார பருவத்தில் கடவுளாக எழுந்தருளியிருப்பவன்

சண்முகன் – ஆருமுகளை கொண்டதால் ஆறுமுகம் அல்லது சண்முகம்

>சரவணன் – சரவணபொய்கை என்ற குளத்தில் தோன்றியவன்

சிவகுமரன் – சிவபெருமானின் குமாரன் முருகன் என்பதால் சிவகுமரன் என்றானார்.

சுப்ரமணியன் – இனியவன்

சுவாமிநாதன் – தந்தைக்கு உபதேசம் செய்தவன்

சேனாதிபதி – சேனைகளின் நாயகன்

தண்டாயுதபாணி – ஆயுதம் தண்டாயுதத்தை உடையவன்

மயில்வாகணன் – மயிலை வாகனமாக கொண்டவன்

முத்தையன் – முத்துவேலர்சாமியின் சுருக்கமான் பெயர்

வடிவேலன் – வேல் ஆயுதத்தை உடையவன்

விசாகன் – முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என பெயர்

வேந்தன் – மலையரசன் அல்லது மலை வேந்தன்

வேலன் – வேல் ஆயுதத்தை உடையவன்

108 முருகன் தமிழ் பெயர்கள்

அமரேசன்Amareshan
அழகப்பன்Alagappan
அழகன் Azhagan
அழகிரிAlagiri
அழகுவேல்Alaguvel
அழகேசன்Alagesan
அன்பழகன்Anbazhakan
ஆதிரன்athiran
ஆதிரூபன்athirupan
ஆரகன்aragan
ஆறுமுகம்Arumugam
ஆனந்தவேல்Ananthavel
இளமுருகன்Ilamurugan
இளையோன்Ilayon
உதயகுமாரன்Udhaiyakumaran
உத்தமசீலன்Uththamaseelan
உமைபாலன்Umaibalan
உமையாலன்Umaiyalan
கடம்பன்Kadamban
கதிரவன் Kadhiravan
கதிர்காமன்Kathirkaman
கதிர்க்குன்றன்Kathirkundran
கதிர்வேலன்Kathirvelan
கந்தசாமிKandasamy
கந்தன் Kanthan
கருணாகரண் Karunakaran
கருணாலயன்Karunalayan
கனகவேலன்kanagavelan
காங்கேயன்Kangeyan
கார்த்திகேயன் Karthikeyan
கிரிசலன்Kirisalan
கிருத்திகன்Kiruthigan
கிருபாகரன்Kirubakaran
குகநாதன்Guhanathan
குணாதரன்Gunatharan
குமரகுருKumaraguru
குமரப்பன்Kumarappan
குமரவேலன்Kumaravelan
குமரன்Kumaran
குருநாதன்Gurunathan
குருபரன்Gurubaran
குருமூர்த்திGurumurthy
குருவன்Guruvan
கோதண்டன்kothandam
சங்கரன்Sankaran
சசிதரன் Sasidharan
சண்முகன்Shanmugan
சரவணன் Saravanan
சிங்காரவேலன் Singaravelan
சித்தன்Chithan
சிலம்பரசன் Silambarasan
சிவக்குமரன்Sivakumaran
சுகந்தன்Suganthan
சுகிர்தன்Sugirthan
சுதாகரன்Sudhakaran
சுந்தரேசன்Sundaresan
சுப்பையன்Subbaiyan
சுப்ரமணியன்Subramaniyan
சூரகன்Suragan
செங்கோட்டுவன்Chenkutuvan
செந்தில்Senthil
செந்தூரன்Sendooran
செவ்வேல்Sevvel
சேயோன்Seiyon
சேனாபதிSenapathi
சொக்கநாதன்Sokanathan
சொக்கப்பன்Chokkappan
சோலையப்பன்Solaiyappan
ஞானவேலவன்Gnavelavan
தணிகாசலம்Thanigasalam
தணிகேவேலன்Thanigaivelan
தண்டபாணிDandapani
தமிழ்குமரன்thamilkumaraan
தனபாலன்Thanabalan
திருமுகன்Thirumugan
திருமுகிலன் Thirumugilan
திருமுருகன்Thirumurugan
தீபன் Deepan
தீனரீசன்Deenareesan
தீஷிதன்Deeshithan
துரைவேலன் Duraivelan
தெய்வநாயகன்Theivanayagan
நாகவேலன்Nagavelan
நிமலன்Nimalan
படையப்பன்Padaiyappan
பரமகுருParamaguru
பரம்பரன்Parambaran
பழனியப்பன்Palaniyappan
பழனியப்பாPalaniyappa
பாலரூபன்Balaroopan
பிரபாகரன்Prabhakaran
பூபாலன்Boopalan
பொன்வேல்Ponvel
மயிலன்Mayilan
மயூரன் Mayuran
மலையன்Malaiyan
மனோதீதன்Manotheethan
மித்ரன் Mithran
முகிலன் Muhilan
முகுந்தன்Mukundan
முணிவேல்Munivel
முத்தப்பன்Muthappan
முருகநாடன்Muruganadan
முருகரசன்Murugarasan
முருகேசன் Murugesan
லோகநாதன்Loganathan
வீரவேல்Veeravel
வேலவன்Velavan



Hits: 3275, Rating : ( 5 ) by 1 User(s).